Wednesday, December 28, 2011

நட்பு

நட்பு என்பது புரிதல் அல்லது புரிந்து கொள்ளுதல். நட்பு என்பது நம்பிக்கை. நட்பு என்பது மதித்தல்.  இங்கு மரியாதை என்பதை வெளிப்படியாக காட்டி கொள்ளவேண்டும் என்ற நியதி இல்லை.   நட்பு தன்னலமில்லாதது. நட்பு சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை, கஷ்டதில்லும் நம்மோடு துணை இருப்பது, தன்னால் இயன்ற உதவி பலன் எதிர் பாராமல் செய்வது நட்பின் சிறப்பு. நல்ல நடப்புக்கு மத்தியில் பேச்சில் என்றும் நன்றி சொல்வதில்லை, எதிர்பார்க்கபடுவதும் இல்லை, சொல்வதும் நல்ல நட்புக்கு அழகில்லை.  நல்ல நட்பின் நன்றி பரிமாற்றம் மிகவும் தேவையான தருணத்தில்   மிகைபடுத்தபடாமல்   நண்பர்களுக்கு இடையில் வெளிப்படும்.

நல்ல நட்புக்கு முடிவு கிடையாது. ஆனால் அந்த ஆழ்ந்த நட்பின் ஆரம்பம் எங்கே தொடங்குகிறது ? எல்லோரும் நல்ல நண்பர்கள்.  அதே சமயம், எல்லோரிடம்மும் எல்லாம் பகிர்ந்து கொள்வதில்லையே. அதற்கென்று (பகிர்தல் என்பதற்கு)  ஒரு நட்பு வளையம் உண்டு. இந்த நட்பு வளையம் ஒருநொடியில், அல்லது ஒரு நாளில் உருவாகுவது அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் நட்பின் தொடக்கம் (உரிய நேரத்தில், எதிர்பாராமல், எதையும் எதிர்பார்க்காமல்) உதவியின் ஆரம்பம். யோசித்து பார்க்கும் பொழுது அது சரி என்றே தோன்றுகிறது. உதவியில் மலர்ச்சி தோன்றுகிறது. ஒருவர் நம்மக்கு உதவுகிறார் என்றால், அந்த உதவியால் நம்முடைய செயல் வெற்றிகரமாக அமைந்தால், முதல் முறை அந்த உதவி செய்தவர்க்கு மனதை ஒருமுகை படுத்தி அவரிடம் நன்றி சொல்வது நட்பின் தொடக்கம். உதவி செய்தவர் அருகில் இல்லை என்றால், அந்த நல்ல மனிதருக்குகாக பிரார்த்தனை செய்வது நன்றி தெரிவிப்பதற்கு இணையாகும். இந்த  பிரார்த்தனையும், நம்முடைய சீரான எண்ணமும் மிக ஒரு நல்ல நண்பனை அறிமுகம் செய்யும்.

நட்பை பற்றிய இந்த சிந்தினை என்னுள் மீண்டும் சிறிய இடைவெளிக்கு பிறகு மலரும். 

அதுவரை 

நட்புடன் நான் 

உங்கள் நண்பன்.  

No comments: