விமான பயணம் என்பது ஒரு தனி சுகம். அதுவும் நமக்கு ஏற்றாற்போல் இருக்கை அமைத்துவிட்டால் அல்லது கேட்டு கிடைக்க பெற்றால் அஹா என்ன ஒரு இனிமயான தருணம். என்னுடைய சமீபத்திய பயணம் : என்னவென்று சொல்லுவது ..சரியான நேரத்தில் விமானம் பயணம். விமான இருக்கை அதுவாக அமைந்தது. நன்றாக இருந்தது. தமிழ் திரைப்படம். படம் பார்க்க ஆர்வம் இல்லை என்றால் தாய் மொழி மற்றும் தேசிய மொழி பாடல்கள் விமானத்தில் ஒளிபரப்பபட்டன. அளிக்கப்பட்ட உணவு வகைக்களின் ருசி பசியில் மறந்தது. விமானம் அரைமணி நேரம் முன்னமே வந்தடைந்தது.
தரை இறங்கும் நேரம். உட்கார்ந்த நிலையில் தலையை மட்டும் திருப்பி சக பயணிகளை பார்க்கிறேன். ஏதோ ஒரு வித இறுக்கம்/தயக்கம்/தவிப்பு இன்னும் பல முக பாவங்கள். சட்தென்று எனது நினைவுகள் பின்னோக்கி பறக்க ஆரம்பிக்க, நினவு அலைகளில் சமீபத்தில் நடந்த அந்த பயங்கர விமான விபத்து பற்றிய ஊடகங்களின் மூலம் கண்ட காட்சி/செய்தி தொகுப்பாக படித்த தகவல்கள் கண் முன்னே மீண்டும் விரிகிறது. இதயம் கனக்கிறது. சிந்தனை சிதறாமல் மனதால் இறைவனை வேண்டுகிறேன் -- இந்த பிருமாண்டமான பிரபஞ்சத்தை காத்து அருளும் சக்தியே -- இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தின் உங்கள் செல்ல குழந்தையான பூமியில் உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் காத்து அருளுங்கள். அனைவரும் சந்தோஷமாக வாழ அருள் புரியுங்கள். இயற்கையாய் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் உங்கள் தெய்வீக ஆற்றலால் இந்த உலகில் எங்கும் நல்லதே நடக்கட்டும். கடவுளே இந்த விமான பயணம் உங்கள் அருளால் சுகமாக அமைத்து. இது போல இனி வரும் பயணமும் எங்கள் அனைவருக்கும் இனிதே அமைய அருள் புரியுங்கள்.
மீண்டும் சந்திப்போம்
மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment