கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் என்றும் என் மனம் கவர்ந்தவை .....
"உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே நம் அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
தேடல் என்பது அற்புதம். தேடல் மிகும் சுகமானதே. தேடல் பலவகை. எல்லோருக்கும் ஒவொரு வகை. விளையாட்டாக அம்மா ஒளிந்துகொண்டல் அம்மாவை தேடும் குழந்தையின் தேடலில் ஒரு தவிப்பு இருக்கும். என்னதான் விளையாட்டு என்றாலும் அந்த தவிப்பை கண்ட தாயின் உள்ளம், உடனே ஓடி சென்று அந்த குழந்தையை வாரி அணைக்கும். அந்த தருணம் தேடல் இருவருக்குமே பரஸ்பரம் சந்தோஷத்தை கொடுக்கிறது, மீண்டும் தேட தோன்றுகிறது. அந்த விளையாட்டு தொடர்கிறது.
எனக்கு தெரிந்து தேடல் இருவகை. முதல் வகை தேடுதல் என்பது ஒரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு என்பது என்ன ? ஒரு செயலின் தொடக்கத்தில் யோசிக்கும் முடிவுதான் எதிர்பார்ப்பு. ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க அந்த செயலை பற்றிய சிந்தனைகளும், அதன் வழிமுறைகளும் சரியான முறையில் தெரிந்துருப்பது அவசியம். அப்படி இல்லையெனில் வழிமுறைகள் தேடதொடங்கும் பொழுது எதிர்பார்த்த முடிவு கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம், வேறு முடிவு கிடைக்கலாம், முடிவே கிடைக்காமலும் இருக்கலாம். இது வெளி தேடல். இந்த தேடலின் முடிவில் வெற்றி கிடத்தல் சந்தோஷம். இல்லையெனில் தேடல் வெற்றி கிடக்கும் வரை தொடர்கிறது . இந்த வெளி தேடலில் வெற்றி கிடைத்தபின், மற்றொரு புதிய தேடல் ஆரம்பமாகிறது. முன் கிடைத்த தேடலின் வெற்றியை இந்த தேடலுக்கு ஊக்கம் தருகிறது. மேலும் மேலும் வெளி தேடல் தொடர்கிறது. ஒரு கட்டதில் இந்த வெளி தேடலில் அயர்ச்சி ஏற்படுகிறது. உடல் தளர்கிறது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த தேடல் முடிவடைகிறது.
இரண்டாவது தேடல் என்பது தன்னை தேடுவது, தன்னுள் தேடுவது, இது உள் தேடல். குழந்தையின் தேடல் அம்மாவை சுற்றியே இருக்கும். வேற எந்த ஒரு எதிர்பார்ப்பும் அதற்கு இல்லை. அந்த குழந்தையின் மழலை மொழி அந்த தாய்க்கு மட்டும்மே தெரிந்த ரகசிய சம்பாஷனைகள். குழந்தைக்கு எப்போது பசிக்கும், குழந்தை ஏன் அழுகிறது , குழந்தையின் தேவை என்ன என்று அனைத்தும் அறிந்தவள் தாய். அதேபோல எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னை தேடுவது என்பது குழ்தையின் தேடல் போல. தன்னுள் சென்று தன்னை சுற்றி அறியும் தேடல். இந்த தேடல் முடிவு உடனடியாக கிடைப்பதில்லை .எதை தேடுகிறோம் என்று அறிந்து கொள்வதற்கே நமக்கு அதிக சமயம் தேவை.படுகிறது. அந்த தேடலில், சரியான பாதையில் நம்மை வழி நடத்தி செல்ல குருவின் அருள் மிகவும் அவசியம். குழந்தையின் மழலை மொழி போல நமக்குள் இருக்கும் அணைத்து கேள்விகளுக்கும் குருவின் பதில் நம் தேடலை மிக சிறப்பாக நல்வழிபடுதும். இந்த தேடலில் உடல் தளர்ந்தாலும், உள் தேடல் சக்தியில் என்றும் ஒரு பிரகாசம் இருக்கும், சந்தோஷம் நிறைந்துருக்கும். அந்த சக்தி நம்மை சிறந்த முறையில் நல்வழி படுத்தும்.
தேடல் தொடரும்....
நட்புடன்
கண்ணன்

1 comment:
தேடல் பற்றிய இந்த துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒவ்வொரு தெரிந்தோ தெரியாமலா இந்தத் தேடலைச் செய்துகொண்டே இருக்கிறது. நம்முள் ஏற்படும் எது கிடைத்தாலும் நிறைவடையாத அதிருப்தி இதைத்தான் உணர்த்துகிறது. உனது தேடல் வேறு, அதை அறியாமல் நீ என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறாய் என்பதை உணர்த்த ஏற்படுத்துவதே இந்த அதிருப்தியின் நோக்கம்.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விறகுவெட்டி காட்டில் கடும் வெயிலில் தினமும் விறகுவெட்டி, வெட்டிய விறகை ஊருக்குக் கொண்டு சென்று விற்று, அவனும் அவன் குடும்பமும் கால் வயிறு, அரை வயிறு உண்டு வாழ்ந்தனர். ஒரு நாள் அவன் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மகான், அவனைப் பார்த்துச் சிரித்து, “ஏன் மகனே, இவ்வளவு கஷ்டப் படுகிறாய். இன்னும் ஆழமாகச் செல், சென்று கொண்டே இரு” என்று சொல்லி மறைந்தார்.
அவனுக்குத் தெளிவாகப் புரியாவிட்டாலும், ஓரளவுக்கு உணர்ந்து, காட்டினுள் வெகுதூரம் சென்றபோது, விலை உயர்ந்த மரங்களைக் கண்டு, அவற்றை வெட்டிச் சேர்த்து கொண்டு விற்றபோது, நிறைய பொருள் கிடைத்து, வயிராறச் சாப்பிடமுடிந்தது. நாட்கள் இப்படியே ஓட, ஒரு நாள் அதிருப்தி தலைதூக்க, மகான் சொன்னதைச் சிந்திக்க, இன்னும் மேலே சென்று தேடினான். சந்தன மரங்கள் கிடைக்க, அவற்றால் அவன் வசதி வாய்ப்புகள் பெருகி, இன்னும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். பிறகு மீண்டும் அதிருப்தி. மீண்டும் சிந்திக்க, மேலும் ஆழமாகச் செல்ல, காட்டில் வைரக் கற்களைக் கண்டான். அவற்றால் அவன் பெரிய பணக்காரனாகி சீரும் சிறப்புடனும், பெரு மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தான். மீண்டும் அதிருப்தி. மீண்டும் சிந்தனை. இப்படிப் பல கட்டங்களைத் தாண்டி, பல உயர் நிலைகளை அடைந்தபோதும், துரத்தும் அதிருப்தி. ஒரு நாள் காட்டினுள் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருந்தான். நன்றாக இருட்டிவிட்டது. அப்போதும் அவன் நிற்கவில்லை. வெறியுடன் நடந்தான். களைத்து விழுவது போல் உணரும் நிலையில், தூரத்தில் ஒரு ஒளியைக் கண்டான். அதை நோக்கி ஓட ஆரம்பித்தான். நெருங்க, நெருங்க ஒளி பெரிதாகிக் கொண்டே சென்றது. ஆனால் அது கண்ணைக் கூசவைக்கும் ஒளி அல்ல; மாறாக கவர்ந்து இழுக்கும், குளுமையான, சுகமான ஒளி. அந்த ஒளியை அவன் நெருங்கியதும், அவன் குதூகலத்தில் கொண்டாட்டம். அந்த ஒளியோடு இரண்டரக் கலந்தான். அதன் பிறகு யாண்டும் பேரின்பம் (Eternal Bliss). அதிருப்தி நெருங்க முடியாத உன்னதமான நிலை. மனம் நிறைவு பெரும் ஒரு உன்னத நிலை. மகான் சொன்னதின் முழுப் பொருளை அவன் உணர்ந்தான்.
இந்தக் கதையில் வருவதுபோல் முழுமையைத் தேடி அடையாத வரை, வேறு என்ன கிடைத்தாலும் மனதில் ஒரு குறை, ஒரு அதிருப்தி இருந்து கொண்டேதான் இருக்கும்.
Post a Comment